கோடை காலம் வந்துவிட்டாலே அனைவரும் உடலுக்கு குளிர்ச்சியைப் பெற்றுத்தரும் உணவுகளைத்தான் தேடுவார்கள். அந்த வகையில் மோர் அருந்துவது மிகவும் சிறந்தது. மோர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மோருடன் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து குடிப்பதால் அது உடலின் வெப்பநிலையை சமநிலையாக வைத்திருக்கும்.
கோடைக் காலத்தில் நம் உடலுக்கு அதிகமாக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் தண்ணீர் அருந்துவதை முற்றாக தவிர்த்து விடுவர்.
ஒரு சிலருக்கு அதிக வேலைப்பளுவின் காரணமாக நீர் அருந்துவதற்கு மறந்துவிடும். உண்மையில் கோடையில் நீர் அருந்துவது அவசியம்.
கோடையில் மட்டும் நீர் அருந்த வேண்டும் என்றில்லை. நாள்தோறும் இத்தனை போத்தல்கள் நீர் அருந்தவேண்டும் என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி குடித்து வந்தால், பல நோய்களை தடுக்கலாம்.
மேலும் கோடைக் காலத்தில் அதிகமாக தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் தயிரில் புரதம், கல்சியம், விட்டமின் பி போன்ற சத்துக்கள் இருந்தாலுமே அதனை நாள்தோறும் உண்ணும்போது அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
தயிரில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை காணப்படுவதால் அன்றாடம் உண்பதை தவிர்ப்பது நல்லது. தயிர் அனைவருக்கும் நன்மை பயக்காது. ஒரு சிலரின் உடல் நிலைக்கு ஏற்ப பின் விளைவுகள் ஏற்படலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM