முகப்பரு, கரும்புள்ளிகள் மறைய சிறந்த குறிப்புகள்

05 Apr, 2025 | 05:46 PM
image

முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இருந்தால் வெளியில் செல்வதற்கு கூட சில பெண்கள் கூச்சப்படுவார்கள். காரணம், இவை முக அழகை கெடுக்கும் விடயங்கள். 

அப்படிப்பட்டவர்களுக்கு எளிதாக பருக்கள், கரும்புள்ளிகளை நீக்குவதற்கான அருமையான குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

இரண்டு இஞ்சி துண்டுகளை எடுத்து இடித்து நன்றாக சாறு பிழிந்து அடியில் உள்ள மண்டியை எடுத்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். 

காலையில் எழுந்ததும் அவரை இலைச் சாற்றை எடுத்து முகத்தில் தடவி ஒரு மணித்தியாலம் ஊறவிட்டு கழுவினால் முகம் பளபளப்பாகும். 

வெள்ளைப்பூண்டை பாலில் ஊறவைத்து அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும். 

காலையில் எழுந்து முகம் கழுவிய பின்னர் சந்தனம் கரைத்த நீருடன் பாசிப்பயிரை அரைத்து முகத்தில் பூசி ஒரு மணித்தியாலம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் விரைவாக மறையும். 

கடற்சங்கை பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை பருக்களின் மீது தடவி வந்தால் மூன்று நாட்களில் பருக்கள் மறையும். 

மரப்பாசியை நீர் விட்டு கல்லில் உரசி அதனை முகப்பருக்கள் மீது தடவி வர வேண்டும். 

ஜாதிக்காய், மிளகு, சந்தனம் மூன்றையும் நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு தொல்லை நீங்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right