நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக ‘டிமென்ஷியா’ (Dementia) என்னும் நினைவுக் குறைபாடும் ஒன்றாகும். அதாவது, ‘அல்சைமர்ஸ்’ (Alzheimer’s) உள்ளிட்ட மறதி நோய் தொடங்கி பல்வேறு நினைவுக் குறைபாடு சார்ந்த பிரச்சினைகளின் தொகுப்பே டிமென்ஷியா.
உலக அளவில் சுமார் 6 கோடி பேர் இந்த மறதிப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பதாக ஆய்வுள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், 2050ஆம் ஆண்டில் இப்பிரச்சினைகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை 139 மில்லியன் ஆக உயர வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பொதுவாக, வயது மூப்பின் காரணமாக ஏற்படும் மறதிப் பிரச்சினையான அல்சைமர்ஸ் நோய்தான் டிமென்ஷியாவில் பெரும் பங்கு வகிக்கிறது. சராசரியாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூளைத் தேய்மானம் காரணமாக டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மேலும், வேறு பல உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும் டிமென்ஷியா ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பக்கவாதம், சோடியம் குறைபாடு, விட்டமின் பி12 குறைபாடு, தைரொய்ட் குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு, மனச்சோர்வு, புகைப் பழக்கம், மதுப்பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் நம் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராகத் திரும்புவது (Auto immune diseases) போன்ற பல காரணங்களால் இந்த நினைவுக் குறைபாட்டுக்கு ஆளாக நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது அறிவாற்றல் திறன்களை பாதிப்பதோடு குழப்பம் மற்றும் திசைதிருப்பலுக்கும் வழிவகுக்கின்றதாம்.
அறிகுறிகள்
உளவியல் மாற்றங்கள், மன அழுத்தம், பதட்டம்
ஆளுமை மாற்றங்கள்
சிக்கலான பணிகளைச் செய்வதில் சிரமம்
சரியான தொடர்பு மற்றும் வார்த்தைகளின் தேர்வு இல்லாமை
சிக்கலைத் தீர்க்கும் திறன் இல்லாமை
குழப்பம் மற்றும் திசைதிருப்பல்
காரணங்கள்
பக்கவாதம், சோடியம் குறைபாடு, விட்டமின் பி12 குறைபாடு, தைரொய்ட் குறைபாடு
உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு
மனச்சோர்வு, புகைப் பழக்கம், மதுப்பழக்கம்,
போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் நம் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராகத் திரும்புவது (Auto immune diseases)
ஹண்டிங்டனின் நோய் (Huntington's disease)
நடுக்குவாதம் எனும் பார்கின்சன் நோய் (Parkinson's disease)
மூளை தொற்று
சிராய்ப்புண்
மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள்
வளர்சிதை மாற்ற கோளாறுகள்
ஊட்டச்சத்து குறைபாடு
எப்படி தவிர்க்கலாம்?
மூளையைத் தூண்டும் செயல்களில் பங்கேற்கலாம்.
கல்வியில் மனதை செலுத்தலாம்.
மனதளவில் ஈடுபாடு கொண்ட தொழிலில் பணியாற்றுவது.
புதிய திறன்களைக் கற்றுக்கொள்தல்.
சரியான உணவு, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது ஆகியவையும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கும்.
கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகித்தல், மது, புகைப் பயன்பாட்டை தவிர்ப்பது.
போதுமான உறக்கம்
சிகிச்சை
பெரும்பாலான வகையான டிமென்ஷியாவிற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அறிகுறிகள் ஆரம்பிக்கும் போதே, அது பற்றி கவனிக்க வேண்டும்.
குறிப்பாக, சமூக ஈடுபாடு எந்த வயதிலும் மூளைக்கு நன்மை பயக்கும். குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டார், சக பணியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வது, நட்புடன் பழகுவது, மூளையின் மனநிலை, கண்ணோட்டம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை அதிகரிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM