முன்­னைய ஆட்­சியின் போது அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த பாது­ காப்பு ஒப்­பந்தம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப டும். இதன்­பி­ர­காரம் குறித்த ஒப்­பந்­த­த்திற்­கான காலம் நிறை­வ­டைந்த போதும் ஒப்­பந்தம் மீள் புதுப்­பிக்­கப்­பட்டு விரைவில் கைச்­சாத்­தி­டப்­படும். இது தொடர்பில் இலங்­கையின் நிலைப்­பாட்டை ஏற்­க­னவே அறி­வித்து விட்டோம். அமெ­ரிக்க அரசின் முடி­வினை  எதிர்­பார்த்­துள்ளோம் என்று  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் பாரா­ளு­மன்­றத் தில் விவாதம் நடத்­து­வது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட் டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுரகுமார திஸா­நா­யக்க எம்.பி. நிலை­யி­யற் ­கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் நேற்று முன்­தினம் எழுப்­பிய கேள்­விக்கு நேற்று சபையில்  பதி­ல­ளிக்கும்போதே பிரதமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் அளித்த பதிலில் மேலும் தெரி­வித்­தா­வது, 

முன்­னைய ஆட்­சியின்போது அமெரிக்­ கா­வுடன் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த பாது­காப்பு ஒப்­பந்­தத்தை தொடர்ந்து நீடிக்­க­வுள்ளோம். இதன்­பி­ர­காரம் அமெ­ரிக்­கா வின் பாது­காப்புத் துறையின் உத­வி­யுடன் இரா­ணுவ பயிற்சி, நலன்­புரி செயற்­பாடு, ஒன்­றி­ணைந்த வேலைத்­திட்­டங்கள் போன்ற விட­யங்­களில் ஒப்­பந்­தத்தில் உள்­ள­டங்­கு­கின்­றன. 

இந்த ஒப்­பந்தம் தொடர்­பாக இலங்­கையின் முப்­ப­டையின் பிர­தா­னி­க­ளுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்­தப்­பட்­டது. அத்­துடன் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு துறை யு­டனும் பேச்­சுவார்த்தை நடத்­தப்­பட்­டன. இதன்­போது ஒப்­பந்­தத் தில் உள்­ள­டங்க வேண்­டிய விட­ய­தா­னங் கள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது. 

இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அமெ­ரிக்கா இன்னும் கால அவ­காசம் கோரி­யுள்­ளது. எனினும் முன்­னைய ஆட்­சி யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­திற்கும் புதிய ஒப்­பந்­தத்­திற்கு வித்­தி­யாசம் உள்­ ளது. 

அதா­வது முன்­னைய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் பத்து வரு­டத்தின் பின்­னரே ஒப்­பந்­ததை இரத்து செய்­ய­மு­டியும். எனினும் புதிய நிபந்­த­னையின் பிர­காரம் எமக்கு விதி­மு­றைக்கு அப்பால்  செல்லும் தரு­ணத்தில் ஒப்­பந்­தத்தை இரத்துச் செய்ய முடியும். எனினும் இது­வரை நாம் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­ட­வில்லை என்றார்.

இதன்­போது எழுந்து பேசிய அநுரகுமார திஸா­நா­யக்க எம்.பி., இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்த முடியுமா? அதற்கு இடம் வழங்குவீர்களா என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, அமெரிக்காவுடன் கைச்சாத் திடப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முடி யும். எனினும் இதனை ஆராய்ந்த பின்பே தீர்மானிக்க முடியும் என்றார்.