ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

05 Apr, 2025 | 03:06 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி 'திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா,உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன்,  ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம். ஜி .ஆர், மோனிஷா ப்ளஸ்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பொலிவுட் நட்சத்திர நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.

மேலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் த்ரில்லர் ஜோனரிலான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் தமிழ்,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக கிடைக்கும் விடுமுறை தினங்களில் இப்படம் வெளியாவதால் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது...

2025-11-08 20:24:43
news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16