இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் வலது அல்லது இடது என ஏதேனும் ஒரு காதில் மட்டும் இரைச்சல் ஒலி ஏற்படும். இதனால் ஏற்படும் அசௌகரியம் மன உளைச்சலை ஏற்படுத்தி, செயல் திறனை பாதிக்கும். இதற்கு மருத்துவ மொழியில் யுனிலேட்ரல் டின்னிடஸ் என குறிப்பிடுவார்கள். இதற்கு நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிலருக்கு இரண்டு காதுகளிலும் ஒரே தருணத்தில் விவரிக்க இயலாத அல்லது துல்லியமாக வகைப்படுத்த இயலாத ஒலிகள் இரைச்சலாக ஏற்படும். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு, மனித வளம் செயலற்றதாகிவிடும்.
இவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு காதில் மட்டும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்... அதற்கும் சிகிச்சை பெற வேண்டும். காதில் மெழுகுகள் உருவாவதாலும், ஜலதோஷத்தின் காரணமாகவும் காதில் ஒரு பகுதியில் அதாவது உள் காதின் ஒரு பகுதியில் நீர் சேர்ந்து விட்டாலும் இத்தகைய இரைச்சல் ஒலி கேட்கும்.
இவர்களுக்கு வைத்தியர்கள் ஓடியோகிராம் எனும் பரிசோதனையின் மூலம் காதின் செயல் திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்வர். அதனைத் தொடர்ந்து இரைச்சல் ஏற்படுவதற்கான காரணத்தையும் துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன்பிறகு அதற்கென பிரத்யேக சிகிச்சை மூலம் அதற்கு நிவாரணம் அளிப்பார்கள். சிலருக்கு நிவாரண சிகிச்சைக்கு பிறகும் இத்தகைய இரைச்சல் ஒரு காதில் மட்டும் கேட்டால், அவர்களுக்கு எம்.ஆர். ஐ ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை அறிவார்கள்.
இந்த தருணத்தில் காதின் நடுப்பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் பாதையில் ஏதேனும் தீங்கற்ற கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..! என்பதனை அவதானித்து, அதனை அகற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM