இன்றைய சூழலில் எம்மில் பலரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பர். திடீரென்று வேலையில் இருந்து விலக்கி விடுவர். வேறு சிலர் அரசு துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பர்.
இவர்களுக்கு பண வரவு அதாவது, தன வரவில் தடை அல்லது தாமதம் ஏற்பட்டிருக்கும். வேறு சிலருக்கு வரவேண்டிய பணம் உரிய காலத்தில் வராமல் தாமதமாகி கொண்டே இருக்கும்.
அதே தருணத்தில் வருகை தந்து கொண்டிருந்த மாதாந்த வருவாயில் விதிமுறை குழப்பம் காரணமாக தடையும் ஏற்பட்டிருக்கும். இத்தகையவர்களுக்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : கல் உப்பு- மஞ்சள் தூள் - பன்னீர் - ஒரே அளவிலான நாணயங்கள்
அமாவாசைக்கு முன்தினம் ஒரே அளவிலான அல்லது ஒரே மதிப்பிலான 108 நாணயங்களை தெரிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயங்களை கல் உப்பு - மஞ்சள் தூள்- பன்னீர் என இந்த வரிசையில் தூய்மைப்படுத்துங்கள். அதாவது முதலில் கல் உப்பு கலந்த தண்ணீரிலும், அதனைத் தொடர்ந்து மஞ்சள் தூள் கலந்த தண்ணீரிலும், இறுதியாக பன்னீரிலும் அந்த 108 ஒரே மதிப்பிலான நாணயங்களை தூய்மைப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
அமாவாசை தினத்தன்று இந்த 108 சுத்திகரிக்கப்பட்ட நாணயங்களை எடுத்துக்கொண்டு அதனை அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலையில் உங்களுடைய தலையை சுற்றி வீசி விடுங்கள். நாணயத்தை உங்கள் தலையின் வலது புறத்திலிருந்து இடது புறமாக சுற்றி வீசி விட வேண்டும்.
இதே போல் அடுத்த அமாவாசை தினத்தன்று 54 நாணயங்களையும் இதே போல் சுத்திகரித்து ஓடும் நீர் நிலையில் விட்டு விட வேண்டும்.
மூன்றாவது அமாவாசை தினத்தன்று 27 நாணயங்களை இதே போல் சுத்திகரித்து ஓடும் நீர்நிலையில் விட்டு விட வேண்டும். நான்காவது அமாவாசை தினத்தன்று ஒன்பது நாணயங்களையும், ஐந்தாவது அமாவாசை தினத்தன்று மூன்று என்ற எண்ணிக்கையிலான நாணயங்களையும் இதே போல் சுத்திகரித்து ஓடும் நீர் நிலைக்கு சென்று தலையைச் சுற்றி வீசிவிட்டு வரவேண்டும்.
அந்தத் தருணத்தில் வரவேண்டிய தன வரவில் தடையில்லாமல், தாமதம் இல்லாமல் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் முன்னோர்களை வணங்குவதும், காகம், நாய் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவிடுவதும் உத்தமமான பலனை உடனடியாக பெற்றுத் தரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM