காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறுவு­வதின் ஊடாக எவரும் தண்­டிக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என பிர­தமர் கூறு­வ­தாயின் ஏன் இப்­படி ஒரு அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டது. சிறைச்­சா­லைக்குள் நுழைந்து தேடும் அள­விற்கு அலு­வ­ல­கத்­திற்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் ஏன் இவ்­வ­ளவு அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதி­ரணி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடைபெற்ற காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் தாபித்­தலும் நிர்­வ­கித்­தலும் பணி­களை நிறை­வேற்­றுதல் திருத்­த­சட்­ட­மூ­லத்தின் இராண்டாம் மதிப்­பீட்டின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரைா­யாற்­று­கையில்,

காணாமல் போனோர் பற்றிய அலு­வலம் நிறு­வு­தலின் ஊடாக எந்­த­வொரு விசா­ர­ணையும் முன்­னெ­டுக்க முடி­யாது. எவ­ருக்கு எதி­ரா­கவும் தண்­டனை வழங்கவும் முடி­யாது என பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க குறிப்­பிட்­டி­ருந்தார். அப்­ப­டி­யாயின் எதற்­காக காணாமல் போனோர் அலு­வ­ல­கம் நிறு­வப்­பட்­டது. 

அப்­படி இல்­லை­யென்றால் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை மாத்­திரம் முன்­னெ­டுத்து சென்­றி­ருக்­க­லாமே. ஏன் காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டது. 

அத்­துடன் இந்த அலு­வ­ல­கத்­திற்கு முகாம் மற்றும் சிறைச்­சா­லைக்குள் நுழைந்து ஆட்­களை தேடு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­ஊ­டாக பொலி­ஸுக்கு இல்­லாத அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே இவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டமைக்கான உள்ளக நோக்கம் என்ன? ஆகவே இந்த அலுவலகம் நிறு வியமை ஊடாக அரசாங்கத்திற்குள் உள் நோக்கம் ஒன்றும் இருக்கின்றது என்றார்.