முடி உதிர்தல் பிரச்சினைக்கு இவையெல்லாம் தீர்வாகும்

05 Apr, 2025 | 11:18 AM
image

ஒரு பெண்ணுக்கு கூந்தல் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. முடி வளர்ச்சிக்கு பலவிதமான ஷெம்பூ, எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பர்.

அதன்படி முடி வளர்ச்சிக்கும் முடி உதிர்வதலை தடுப்பதற்கும் சில பொருட்கள் உதவியாக இருக்கும். 

  • முடி உதிர்வுக்கான காரணிகளில் ஒன்றாக இருக்கும் பேன் தொல்லையை நீக்க சீதாப் பழத்தின் விதைகளை பொடியாக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி, தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
  • தலையிலுள்ள சொட்டை, வழுக்கை போன்றவை நீங்க வேண்டுமானால் சின்ன வெங்காயத்தை, செம்பருத்தி பூவுடன் கலந்து அரைத்து அதன் சாற்றை குறிப்பிட்ட இடங்களில் தடவ வேண்டும்.
  • வெள்ளைப் பூண்டை நன்றாக நசுக்கி அதன் சாற்றை வேர் மயிர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்தல் நின்றுபோகும். 
  • தலை நரைக்க காரணமான விட்டமின் கே குறைபாட்டை நீக்குவதற்கு நெல்லிக்காய், சுண்டைக்காய், பாகற்காய், பீட்ரூட், பீர்க்கங்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • சீயக்காய் தூளை அரிசி வடித்த கஞ்சியுடன் சேர்த்து தலைக்கு தடவினால் முடி மிருதுவாகும். 
  • வாரம் ஒரு தடவை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து செய்தால் முடி உதிர்தல் நிற்கும். 
  • நான்கு தேக்கரண்டி வால்மிளக, இரண்டு தேக்கரண்டி வெந்தயம், கசகசா போன்றவற்ற பசும்பாலில் ஊறவைத்து அரைத்து, தலைக்கு தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் கூந்தல் வறட்சி நீங்கும்.
  • சீயக்காய் பொடியுடன் ஒரு கரண்டி புளித்த தயிர் சேர்த்து தலைக்கு தடவினால், தலைமுடி மிருதுவாகும். 
  • வெந்தயக் கீரையை அரைத்து தலைக்கு தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் கூந்தல் உதிர்வு குறையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right