எம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றினாலும் தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையங்களில் பணியாற்றினாலும். நாளாந்தம் வீட்டிலிருந்து புறப்படும்போது நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் என ஏதேனும் ஒன்றை பூசிக்கொண்டு செல்வோம்.
இந்த பழக்கம் எமக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களை மன உறுதியுடன் எதிர்கொள்வதற்கு சூட்சமமான நம்பிக்கை அளிக்கும். இதனால் இந்த பழக்கத்தை இன்று வரை தொடர்கிறோம்.
அதே தருணத்தில் எம்முடைய வீடுகளில் ஆற்றல் வாய்ந்த அதாவது ஆரா எனும் கண்களுக்கு புலப்படாத சக்தியை அள்ளி அள்ளித் தரும் ஆன்மீக பொருட்களையும் வைத்திருப்போம். இதன் மூலம் வீடுகளை நேர் நிலையான அதிர்வலைகளால் பரவச் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவோம்.
இந்நிலையில் வேறு சில காரணங்களால் எம்முடைய பொருளாதார நிலையில் ஏற்றமும் இறக்கமும் ஏற்பட்டாலோ அல்லது சமச்சீரற்ற தன்மை தொடர்ந்தாலோ இதற்கும் ஒரு ஆற்றல் வாய்ந்த ஆன்மீக பொருட்களை உபயோகிக்க தொடங்கினால் நிலைமை சீரடையும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த பொருள் அஞ்சன கல். ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் இந்த அஞ்சன கல்லில் அசலானவற்றை அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் தெரிவு செய்து எம்முடைய வீடுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
குறிப்பாக, பூஜை அறை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டு இடங்களில் இதனை இடம்பெறச் செய்தால் இதன் மூலமாக பரவும் ஆற்றல் தன வசியத்தை உண்டாக்கி தன வரவை மேம்படுத்தும். உங்களின் வருவாய், செலவுகளுக்கு போக சேமிக்க வழி வகுக்கும். உங்களது சேமிப்பு உயரத் தொடங்கும்.
மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த அஞ்சன கல்லை உங்கள் வசதிக்கேற்ப உருமாற்றி உடன் எடுத்துச் சென்றால் சந்திக்கும் நபர்களிடத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
வணிக ரீதியான பேச்சு வார்த்தையின்போது பலன் அளிக்கும் வகையில் விடயங்களை பேசி காரியத்தை சாதிப்பீர்கள். இத்தனை ஆற்றல் வாய்ந்த, சூட்சம ஆற்றல் நிறைந்த அஞ்சன கல்லை வாங்கி பாவிக்க தொடங்குவோம் தன வரவை மேம்படுத்துவோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM