வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையின் உறுப்பினர்களால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின்  கே. சயந்தன் மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர் வடக்கு ஆளுநரிடம் இன்று மாலை நேரடியாக சென்று வாபஸ் கடிதத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையியின் முதலமைச்சருக்கு எதிராக  உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வடக்கில் பெரும் குழப்பங்களும் இழுபறிகளும் ஏற்பட்டிருந்த நிலையில் பல தரப்பினர்களினால் சமரசம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.