புதிய திசுக்கள் உருவாக உதவும் ரோஸ் வோட்டர்

04 Apr, 2025 | 04:34 PM
image

சரும அழகை அதிகரிப்பதில் ரோஸ் வோட்டருக்கு முக்கிய இடம் உண்டு. இதில் காணப்படும் ஆன்டிபக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.

முகத்திலிருக்கும் கருமை மற்றும் பருக்களினால் ஏற்படும் வடுக்களை ரோஸ் வோட்டர் நீக்கும். 

இதில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் சி  அரிப்பு மற்றும் சொரியாஸிஸ் போன்றவற்றை குணமாக்குகிறது. 

நோயெதிர்ப்புக்கு உதவும் திசுக்களை வலுப்படுத்துகிறது. சூரிய அல்ட்ரா வயலட் கதிர் வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. 

சருமத்துக்கான கொலாஜனை அதிகரிக்கச் செய்கிறது. இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக வழி செய்யும். 

ரோஸ் வோட்டர் முகத்தில் ஊடுருவதால் சருமத்துக்கு நீரேற்றம் கிடைக்கும். முகச் சுருக்கத்தை தடுக்கிறது. சருமத்தில் இயற்கையான எண்ணெயை தக்க வைக்கிறது.  வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. 

குளிர் காலங்களில் உங்கள் சருமத்தை வறட்சியடைய விடாமல் பிஹெச் அளவை சமச்சீராக வைக்கிறது. ஒப்பனை செய்வதற்கு முன்பு ரோஸ் வோட்டரை முகத்துக்கு உபயோகித்தால் அதிக நேரம் புத்துணர்வோடு இருக்கலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right