கலோரிகளை எரித்து எடையைக் குறைக்கும் இஞ்சி

04 Apr, 2025 | 11:50 AM
image

சமையல் செய்யும்போது வெறுமனே சுவைக்காக மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்துக்காகவும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சியில் காரத்தன்மை அதிகம் என்பதால் பலரும் அதை தவிர்த்து விடுகின்றனர்.

உண்மையில் இஞ்சியில் ஜிஞ்சரோல் இருப்பதால் பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.  அதுகுறித்து பார்ப்போம்.

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்கும்.  மலச்சிக்கல், வாயுத் தொல்லை, சமிபாட்டு பிரச்சினை போன்றவற்றை நீக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. இதில் உள்ளடங்கியிருக்கும் அன்டி அக்ஸிடென்ட் குடல், கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோயை சரி செய்கிறது. 

இஞ்சியில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும்.  மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை குறைக்கும். 

இஞ்சியை எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?

  • இஞ்சியை துவையலாக செய்து சாப்பிட்டு வர, மார்பு வலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம் குணமாகும். 
  • இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டால் வாதக் கோளாறு நீங்கி உடல் பலமடையும். 
  • இஞ்சி சாறில் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று நீங்கும்.
  • புதினாவுடன் இஞ்சியைச் சேர்த்து துவையலாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம், அஜீரணம், பித்தம் நீஙகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11