இன்றைய சூழலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் லட்சக்கணக்கானவர்கள் நோய் எதிர்ப்பு திறன் குறைபாட்டுடனேயே பிறக்கிறார்கள். இது குறித்த விவரங்களை காண்போம்.  

குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணம் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு ( Primary Immune Dificiency  தான் என்கிறது ஓர்  ஆய்வு. இந்த குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் உறவு முறை திருமணம் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களில் 5 சதவீதற்கும் குறைவானவர்களே உரிய சிகிச்சைகளைப் பெறுகிறார்கள்.

இவர்களுக்கு அவர்களின் தாய் பாசத்துடன் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அது இந்த நோய் ஏற்பட காரணமாகிவிடும். அதே போல் இந்த பாதிப்புடன் இருக்கும் குழந்தைகள் உரிய காலத்தில் சிகிச்சை எடுக்காதிருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் ஆகிய தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

சாதாரண காய்ச்சல், வயிற்று போக்கு, சருமத்தில் ஏற்படும் சில தடிப்புகள் ஆகியவற்றை இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சிகிச்சை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை என்பது ஒரு சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுகிறது. உங்களது குழந்தைகள் இத்தகைய நோய் எதிர்ப்பு திறன் குறைபாட்டிற்கு ஆளாகியிருந்தால், சற்று தாமதியாமல் இதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளவேண்டும் .

Dr. ரம்யா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்