தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல் ; இடைநடுவில் வெளியேறிய நீதி அமைச்சர்

04 Apr, 2025 | 10:54 AM
image

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (03) நாக விகாரையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்ட அதேவேளை, தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகப் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைப் பிரதிநிகள் தையிட்டி காணி உரிமையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியே வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மாற்றுப் பாதை வழியாக வெளியேறிச் சென்றனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், குறித்த விவகாரத்துக்கு சுமுகமான ஓர் தீர்வை வழங்குவதற்கு தாம் முனைப்புக் காட்டும்போதும், தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் தம் ஈடுபடுவது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36