இன்றைய திகதியில் நாம் நாளாந்தம் துவி சக்கர வண்டியில் பயணித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். அலுவலகமாக இருந்தாலும் தொழிற்சாலையாக இருந்தாலும் விற்பனை நிலையமாக இருந்தாலும் அதன் உரிமையாளர்களும், பணியாற்றும் ஊழியர்களும் வீட்டிலிருந்து துவி சக்கர வாகனத்தில் தான் வருகை தருகிறார்கள்.
மோசமான சாலை பராமரிப்பு, போக்குவரத்து நெரிசல், போதுமான அளவிற்கு வாகன பராமரிப்பின்மை, கவனச்சிதறல், என பல்வேறு காரணங்களால் நாளாந்தம் சாலையில் விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். சிலருக்கு கடுமையாகவும், சிலருக்கு குறைவாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இத்தகைய விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களுடைய துவி சக்கர வாகனத்திற்கு நாளாந்தம் அல்லது வாரத்தில் ஒரு நாள் அல்லது தொடர்ச்சியாக 48 நாள் வரும் பூ மாலையை அணிவிக்க வேண்டும். பூ மாலையை வாகனத்திற்கு அணிவித்த பிறகு, இன்று எந்த விபத்தும் நடைபெற கூடாது என பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்.
மாலை என்பது கேது பகவானின் அம்சம் என்பதால் விபத்து நடைபெறும் கடைசி நொடியில் உங்களை அதிலிருந்து கேது பகவான் காப்பாற்றுவார். அதையும் கடந்து விபத்து ஏற்பட்டால் அதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்படாது. இது எளிமையான பரிகாரம் தான். ஆனால் சூட்சம அளவில் பாரிய பலனை வழங்க கூடியது. சனி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களது துவி சக்கர வாகனத்திற்கு பூ மாலையை அணிவித்தால் விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். விபத்தை தவிர்க்கலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM