bestweb

தேனீ கொட்டினால் என்ன செய்யலாம் ?

Published By: Digital Desk 2

03 Apr, 2025 | 04:14 PM
image

தேனீ கொட்டினால், உடனடி கவனிப்பு தேவை. தேனீ, ஊசி போன்ற (stinger) ஒன்றை விட்டுச் செல்லும். அது நஞ்சை உடலுக்குள் அனுப்புகிறது. 

அதனால் முதலில், நகங்கள் அல்லது மட்டை போன்ற பொருளால் அதை மெதுவாக தள்ளி நீக்கவும் (ஊசி போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது நஞ்சை மேலும் உள்ளே அழுத்தும்).

பின்னர், பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு நன்கு கழுவவும்.

அதன்பின், குளிர்ந்த துணி அல்லது ஐஸ் கட்டி வைத்துக் குளிரூட்டவும். வீக்கம் மற்றும் வலி குறைக்க இது உதவும். பசும்பாலால் காயப்பட்ட இடத்தை அழுத்தலாம். (இது, வலி தணிக்க உதவும்).

பேக்கிங் பவுடருடன் தண்ணீர் சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் பூசலாம். அது விஷத்தை செயலிழக்க உதவும். அதுபோல, வினாகிரியையும் பயன்படுத்தலாம்.

மேலும், ஒவ்வாமை அல்லது தீவிர எதிர்விளைவுகள் இருந்தால், மூச்சுத் திணறல், உடல் முழுவதும் அரிப்பு, கண்கள் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை அணுகவும்.

அதேசமயம், மருந்துகள் எதுவும் கைவசம் இல்லையென்றால், மருத்துவரின் அனுமதி பெற்ற ‘பெயின்-கில்லர்’ வில்லைகளை எடுத்துக் கொள்ளலாம். வலி மற்றும் வீக்கம் குறைக்க இவை உதவலாம்.

எச்சரிக்கை:

தேனீ கொட்டிய இடத்தை வாயால் ஊதவோ அல்லது வெறுங்கைகளால் தொடவோ வேண்டாம். முக்கியமாக, ஒரே நேரத்தில் பல தேனீக்கள் கொட்டியிருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56