கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

03 Apr, 2025 | 03:00 PM
image

பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை (03) பிற்பகல் 12;00 மணி முதல் இரவு 11;00 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதற்கிணங்க, திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் தங்கியிருக்காது,  பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் தங்கியிருத்தல்.

வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் தங்கியிருப்பதை தவிர்த்தல். 

திறந்த வெளியில்  தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றின் பாவனைகளை முடிந்தவரை தவிர்த்தல், கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விடுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. அது தொடர்பாக கவனத்தில் கொள்ளுதல், மற்றும் அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெறுதல் போன்ற செயற்பாடுகளை வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளாக வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29