(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா அறிவித்துள்ள வரி அதிகரிப்புக்களோடு, உலக சந்தையில் எமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஏற்றுமதி பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு சர்வதேச சந்தை வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது குறித்து கொள்கை வகுப்பாளர்களும், அரசாங்கமும் அவதானம் செலுத்த வேண்டும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தற்போது தான் இலங்கை படிப்படியாக மீண்டு வருகிறது. ஏற்றுமதி பொருளாதாரம் இதில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது.
எனவே உலக சந்தையில் எமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அந்த வகையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் ஆடை ஏற்றுமதி 40 சதவீத பங்களிப்பினை வழங்குகிறது.
பூகோள பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கமைய அமெரிக்கா விதித்துள்ள வரி அதிகரிப்பானது ஆடை தொழிற்துறை உள்ளிட்ட பலவற்றிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஏற்றுமதி வரிகள் அதிகரிக்கப்படும் போது சர்வதேச சந்தையில் எமது உற்பத்திகளின் விலைகளும் அதற்கேற்ப அதிகரிக்கும். அவ்வாறு விலை அதிகரிக்கும்போது உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும்.
இது இலங்கையில் ஆடை தொழிற்துறையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இந்த வீழ்ச்சியைத் தடுப்பதற்கு நாம் ஏனைய சர்வதேச சந்தைகளை நாட வேண்டும். அதேவேளை தற்போதுள்ள சந்தை வாய்ப்புக்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் ஏற்படக்கூடிய குறுகிய கால பொருளாதார நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதோடு, அதற்கான நீண்ட கால திட்டமிடல்களையும் தயாரிக்க வேண்டும். இது தொடர்பில் அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM