நோய்களுக்கு தீர்வு தரும் அவரைக்காய்

03 Apr, 2025 | 11:29 AM
image

நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒவ்வொரு காய்கறி வகையிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.  அதன்படி அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் அவரைக்காயும் ஒன்று.

அதன்படி அவரைக்காயை உண்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். 

அவரைக்காய் துவர்ப்பு சுவை கொண்டது.  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை என்றும் இளமையாக வைத்துககொள்ளும். 

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடி தொற்று நோய்களை அண்டவிடாது.

அவரைக்காயில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. அவரைக்காயின் உள்ளிருக்கும் விதைகளும் அதிக சத்துக்களுடையது. 

மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை வராமலும் கட்டுப்படுத்தும். இதிலுள்ள பைட் டோஸ்பெரல்ஸ் எனும் தாவர உயிர்கூறானது, புற்றுநோயை தடுக்கும். புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுக்கும். 

இதிலுள்ள இரும்புச் சத்து, புரதம்,சோடியம், மெக்னீசியம், பொஸ்பரஸ், தைமின், செலினியம், கல்சியம் போன்றவை பற்கள் மற்றும் எலும்புகளுக் அதில வலுவைப் பெற்றுத் தரும். 

அவரையில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் பி, கண் பார்வை மங்குதலையும் தடுக்கும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், மயக்கம், கை,கால் நடுக்கம், தலைச்சுற்றல் போன்றவை சரியாகும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் கொழுப்பைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைக்கும். 

ஜீரண சக்தியை அதிக்கப்படுத்தும். இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கும் அவரைக்காய் சிறந்த தெரிவு. வயிற்றுப் புண்கள், மூட்டு வலி போன்றவற்றையும் தீர்க்கும் சக்தி கொண்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15
news-image

ஃபோர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-30 17:09:30
news-image

சர்க்கரை நோயாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2026-05-29 18:11:40
news-image

பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் எனும் நோய்...

2026-05-28 14:59:49
news-image

கால் ஆணி பாதிப்பிற்குரிய நவீன நிவாரண...

2026-05-29 11:52:55
news-image

மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரத்த...

2026-05-25 16:41:07
news-image

இன்ட்ராக்ரானியல் ஹெமடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-25 15:29:33