அம்பலாந்தோட்டை முக்கொலை : சந்தேகநபர் கைது

03 Apr, 2025 | 09:29 AM
image

அம்பலாந்தோட்டை- எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம்  2 ஆம் திகதி இடம்பெற்ற  முக்கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்றையதினம் மாலை பியகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாந்தோட்டை  மாமடல பகுதியைச் சேர்ந்த  42 வயதுடையவர்  என தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், அம்பலாந்தோட்டை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23