நாட்டின் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பை காணமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Image result for மழை virakesari

மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலேயே மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அவதான நிலையம் தெரிவித்துள்ளது.