பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை - அரசாங்கம் விளக்கம்

Published By: Vishnu

02 Apr, 2025 | 09:01 PM
image

(எம்.மனோசித்ரா)

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. மாறாக அதனை அடிப்படையாகக் கொண்டு வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதன் அடிப்படையிலேயே அண்மையில் கொழும்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (2) இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நிகழ்வுகள் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் ஈடுபடுபவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. நாமும் பல சந்தர்ப்பங்களில் அவற்றில் பங்கேற்றிருக்கின்றோம்.

எனினும் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டது அவரால் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்த இரு வசனங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அல்ல. அந்த வசனங்கள் மாத்திரமே பிரச்சினையல்ல. எனினும் சிலர் வன்முறைகளுக்காக அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக ஒத்துழைப்புக்களைக் கோரும் வகையில் செயற்படுகின்றனர்.

ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஊடாக மேலும் பல காரணிகள் வெளிவரும்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இதிலுள்ள பாரதூர தன்மை குறித்து கருத்து வெளியிட முடியும். காசாவில் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றோம். எமது அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை நாம் உறுதிப்படுத்துவற்காக நாம் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-17 06:16:30
news-image

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

2025-06-17 01:48:46
news-image

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள்...

2025-06-16 23:32:40
news-image

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2025-06-16 21:38:20
news-image

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் -...

2025-06-16 21:11:29
news-image

மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு...

2025-06-16 20:58:50
news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் செயலிழக்கச்...

2025-06-16 17:21:34
news-image

உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ள...

2025-06-16 18:29:37
news-image

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

2025-06-16 19:20:26
news-image

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து

2025-06-16 19:18:43
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள்...

2025-06-16 19:04:06
news-image

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச்...

2025-06-16 18:58:49