சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் பிர­வே­சித்த போது கைது செய்­யப்­பட்டு மிரி­ஹானை குடி­வ­ரவு குடி­ய­கல்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 21 வயது மியன்மார் யுவதி ஒரு­வரை களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் இருந்து ஹோட்டல் அறை ஒன்­றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும்  சம்­பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

பாதுக்கை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே கைது செய்ய இவ்­வாறு விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக  பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்ட யுவதி சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­க்கப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலையில், மொழி பிரச்­சினை கார­ண­மாக அந்த யுவ­தி­யிடம் வாக்கு மூலம் பெறு­வதில் சிக்கல் நில­வு­வ­தா­கவும் மொழி பெயர்ப்­பாளர் ஒரு­வரின் உத­வியைப் பெற்­றுக்­கொள்ள வெளி­வி­வ­கார அமைச்சின் உத­வியை நாடி­யுள்­ள­தா­கவும்  விசா­ர­ணை­யாளர் தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்ட யுவதி ரோஹிங்யா இன யுவதி என்ற ரீதியில் அம்­மொ­ழியை மொழி­பெ­யர்க்­கத்­தக்க ஒரு­வரின் உத­வியை பெறும் வரை யுவதி சார்­பி­லான வாக்கு மூலத்தை பெற முடி­யாமல் உள்­ள­தா­கவும் அந்த வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் பொலிஸ் கான்ஸ்­ட­பிளை கைது செய்­வது குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

மியன்மார் யுவதி மிரி­ஹானை தடுப்பு முகாமில் வைத்து சுக­யீனம் கார­ண­மாக  களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். 

இதன்போது அங்கு வந்­துள்ள பாதுக்கை பொலிஸ் நிலைய கான்ஸ்­டபிள் ஒருவர்  அந்த யுவ­தியை வைத்­தி­ய­சா­லையில் இருந்து கையெ­ழுத்­திட்டு வெளியில் அழைத்துச் சென்­றுள்ளார். முகா­முக்கு அழைத்துச் செல்­வ­தாக கூறியே அவர் இவ்­வாறு அழைத்துச் சென்­ற­தாக கூறப்­படும் நிலையில் அது குறித்து பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்­து­கின்­றனர்.

 இந்நிலையில் வைத்­தி­ய­சா­லையில் இருந்து அழைத்து வந்த யுவ­தியை ஹோட்டல் அறை ஒன்­றுக்கு அழைத்துச் சென்று குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் பாலியல் பலாத்­காரம் செய்த பின்னர் தடுப்பு முகாம் அருகில் கைவிட்டு சென்­றுள்ளார்.

இந் நிலை­யி­லேயே அந்த யுவதி வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளுக்கு அமை­வாக துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் கொஹு­வலை பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்­டுள்ளது.

மீள சுக­யீ­ன­ம­டைந்த யுவதி வைத்­தி­ய­சா­லை யில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை ஊடாக அவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விசாரணைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.