கொள்­ளுப்­பிட்டி  பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பாட­சாலை ஒழுங்­கையைச் சேர்ந்த 23 வயது யுவதி ஒருவர்  தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார். 

செரோன் செல்­வ­ராஜா எனும் யுவ­தியே இவ்­வாறு தூக்­கிட்டு தற்­கொலை செய்து­கொண்டுள்­ள­தா­கவும் இச்­சம்­பவம் நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

தனது வீட்டில் தூக்­கிட்டே இந்த யுவதி தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும் சட­ல­மா­னது கொ­ழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்பட்டு பிரேத பரி­சோ­த­னை­களின் பின்னர் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்நிலையில் குறித்த யுவதி தற்­கொலை செய்துகொள்­வ­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய கொள்­ளுப்­பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். 

திரு­மண விவ­காரம் ஒன்று உள்­ளிட்ட சில விட­யங்கள் தொடர்பில் இந்த விசா­ர­ணை­களில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் உண்மைக் காரணத்தைக் கண்டறிய தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.