நித்திலத் தீவகமாம் குபேரபுரியெனும் லங்காபுரி அகம் செய் உயர் நந்நிலம் மலையகம் தனில் கம்பளைத் திருநகர் திருக்கோயில் கொண்டு ஆன்மகோடிகளை காத்து ரட்ஷிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி....!
நல்வரம் வேண்டி வரும் நல்லோர்க்கு நற்துணையாய் அருள் புரிந்து ஏழை எளியோர் வாழ்வு சிறக்க திருக்கோயில் கொண்ட தைப்பூச நாயகி ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி...!
புவிமாந்தர் யாபேரும் பெருவாழ்வு வாழ நின் கடைக்கண் பார்வை தயை கூர்ந்து அவனியெங்கும் அருளிச் செய் அறம் போற்ற மாசி மகந்தனில் மகமாயியாய் அவதரித்து திருவருள் நல்கும்
ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி...! கல்வியில் கரை காண கலைமகளாய் திருக்கோலம் பூண்டு மாணவக் கண்மணிகள் மென்மேலும் உயர திருவருள் வழங்கும் சித்திரையாளாய் திருக்கோயில் கொண்ட ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி...!
வையகம் சீர் நிறை லட்சுமி கடாட்சமாய் சுபீட்சம் கண்டு இத்தரணி மங்கலமாய் சிறக்க வைகாசித் திங்கள் தனில் விசாகமாய் ஒளிவீசி திருக்கோயில் கொண்ட ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி...!
அடியார்கள் என்றென்றும் நின் புகழ் பாடி உளம் புளகாங்கிதம் காண ஆனித்திங்கள் தனில் அருள் மேவி திருக்கோயில் கொண்ட ஸ்ரீ முத்துமாரியன்னை திருத்தாள் போற்றி..!
ஆயிரம் கண்ணுடையாளாய் அவனி காத்து அடியார் நலங்கான ஆடித்திங்கள் தனில் ஆடிப்பூரமாய் திருக்கோயில் கொண்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்னை திருத்தாள் போற்றி...!
பர்வத மலையானுக்கு நற்துணையாய் இடம் அமர்ந்து பங்குநீயென பங்குனித் திங்கள்தனில் "உத்தரமாய்" கம்பளைத் திருநகர் கோயில் கொண்ட உத்தர நாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன்னை திருத்தாள் போற்றி போற்றி போற்றி...!
ஆக்கம்: அருள்மிகு கம்பளை
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான செயலாளர் எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM