ஜிப்லி அனிமேஷன் அம்சத்தால் சாட் ஜிபிடியை அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை சிறிது நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட் ஜிபிடி என்றால் என்ன?
சட் ஜிபிடியை (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதுவும் மற்றொரு தேடு பொறி தானே என்று அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது. இது அதற்கும் மேலாக பல அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கவிதை கேட்டால் அதனை ஓரிரு நிமிடங்களில் கொடுக்கும். புதிர் கேட்டால், விடையும் கொடுக்கும். மிக நீண்ட சாப்ட்வேர் புரோகிராமில் தவறு எங்கு உள்ளது என்று கேட்டால் அதனையும் இது கண்டுபிடித்து சரியாக விடை தரும். அடுத்து நான் ஆரம்பிக்கக்கூடிய சிறிய வியாபாரத்திற்கு என்ன செய்ய வேண்டும்? அதனை எப்படி நடத்த வேண்டும்? என்று கேட்டால், ஓரிரு வார்த்தைகளில் விடை தராமல் மிக விளக்கமாக கொடுக்கும்.
ஜிப்லி அனிமேஷன்?
சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் ஜிப்லி அனிமேஷன் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி, ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.
சாட்ஜிபிடியை கட்டணமின்றி பயன்படுத்திவரும் பயனர்களுக்கும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வசதியை ஓபன்ஏஐ வழங்கியுள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லியில் ஓவியமாக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் மார்ச் 29ஆம் திகதி தொடங்கி எப்ரல் 1ஆம் திகதி ஜிப்லி பயன்பாடு முழுமையடைந்தது.
இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
26 மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களால் வெறித்தனமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வைரல் நிகழ்வைக் காண்கிறேன். கடந்த 5 நாள்களில் 10 இலட்சம் பயனர்களை எட்டியுள்ளோம். ஆனால், இன்று கடந்த ஒரு மணிநேரத்தில் 10 இலட்சம் பயனர்களை அடைந்துள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.
ஜிப்லி என்றால் என்ன?
1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் ஜப்பான் நாட்டில் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை 'ஜிப்லி' படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்
ஜப்பான் மக்களின் இயல்பான தினசரி வாழ்க்கை முறையை மிகவும் நுணுக்கமாக, கையால் வரையப்பட்ட ஜிப்லி படங்கள் காட்டின. இந்த படங்கள் திரைப்படங்களுக்கு ஒரு புதுவிதமான அழகைத் தந்தன.
மேலும் இந்த படங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் கதையின் உணர்வை வெளிப்படுத்தவும், கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கவும் உதவியதால் பெருவாரியான மக்களுக்கு இந்த ஜிப்லி படங்கள் சென்றடைந்தன.
மை நெய்பர் டோடோரோ, பிரின்சஸ் மோனோனோகே, ஸ்பிரிட்டட் அவே ஆகியவை 'ஸ்டூடியோ ஜிப்லி' யின் பிரபலமான அனிமேஷன் திரைப்படங்கள் ஆகும்.
இந்த ஜிப்லி முறையானது அனிமேஷன் திரைப்பட துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அனிமேஷன் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஜிப்லி முறையை தங்களது படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை ஜிப்லி முறையில் உருவாக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM