சோதனைகளில் இருந்து தப்பிக்க உதவும் சூட்சம வழிபாடு

02 Apr, 2025 | 03:13 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்தம் வெவ்வேறு வகையினதான சிக்கல்களை சந்திக்கிறார்கள். அதற்கு தங்களின் அனுபவத்தின் மூலம் தீர்வினை தேடுகிறார்கள்.

சிலருக்கு துல்லியமான தீர்வும் சிலருக்கு தோராயமான நிவாரணமும் கிடைக்கிறது. ஆனால், பிரச்சினை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாரிய சுமையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தி எம்மை முடங்க வைத்து விடுகிறது. 

இதுபோன்ற தருணங்களில் செல்வம் என்பது அதிகமாக தேவைப்படும். நாளாந்தம் வந்து கொண்டிருந்த வருவாயிலும் தடை ஏற்பட்டால் தடுமாறி விடுவோம். இது போன்ற சூழலில் இருப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை மேற்கொண்டால்,  இதிலிருந்து மீண்டு, மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என குறிப்பிடுகிறார்கள்.

முதலில் உங்களுடைய பூஜை அறையில் நர்த்தன கணபதி எனும் கணபதியின் உருவப் படத்தை இடம்பெறச் செய்யுங்கள்.

இந்த நர்த்தன கணபதி சூட்சம ஆற்றலை பெற்றவர். இவரை திங்கட்கிழமைகளில் அருகம்புல் வைத்து, பிரத்யேக மந்திரத்தை உரக்க உச்சரித்து வழிபட தொடங்கினால் உங்களின் செல்வ வளத்தில் ஏற்பட்டிருந்த அல்லது ஏற்படுத்தப்பட்டிருந்த மாய தடை விலகி, தன வரவு தங்கு தடையில்லாமல் வரத் தொடங்கும்.

சிலருக்கு இத்தகைய நர்த்தன கணபதியை வணங்கியும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், உடன் கணக்கம்பட்டி சித்தரின் உருவப்படத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதையும் வணங்க தொடங்கினால், உங்களுடைய பிரச்சனைகள் நீங்கும்.

தங்கு தடையில்லாமல் செல்வ வளம் வரத் தொடங்கும். கணக்கம்பட்டி சித்தரை புதன்கிழமைகளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் புதன் ஓரையில் வழிபட்டால் பலன் உண்டு.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்