இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால், விவரிக்க இயலாத பல்வேறு உடல் சார்ந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
அதிலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முகம், வாய், கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைந்த சிகிச்சைக்குப் பிறகு அவர்களுடைய தோற்றம் மாற்றமடைந்திருக்கும்.
அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்கு தற்போது மைக்ரோவாஸ்குலர் ரீகன்ஸ்ட்ரக்ஷன் எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
விவரிக்க இயலாத பல காரணங்களால் எம்மில் பலருக்கு தலை, கழுத்து, குரல்வளை, வாய்வழி குழி, உமிழ்நீர் சுரப்பிகள், தாடை, தோல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்காக சத்திர சிகிச்சை - கதிர்வீச்சு சிகிச்சை - கீமோதெரபி - போன்ற சிகிச்சைகளை பிரத்யேகமாகவும் ஒருங்கிணைந்தும் வழங்கி நிவாரணம் பெறுகிறார்கள். இந்த தருணத்தில் சிலருக்கு இத்தகைய சிகிச்சை காரணமாக பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அது அவர்களுடைய தோற்ற பொலிவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த தருணத்தில் எம்முடைய வைத்திய நிபுணர்கள் இதுபோன்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஃபிரீ ஃபிளாப் சரஜேரி என்றும்இ மைக்ரோ வாஸ்குலர் ரீகன்ஸ்ட்ரக்ஷன் என்றும் குறிப்பிடப்படும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள்.
அதாவது, பாதிக்கப்பட்ட எலும்பு, தசை, நரம்பு ஆகியவற்றிற்கு பதிலாக உடலின் வேறு பகுதியில் ஆரோக்கியமாக இருக்கும் எலும்பு,தசை, நரம்பு ஆகியவற்றை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தி நிவாரணம் தருகிறார்கள்.
இதில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் பாவிக்கப்படுவதால் ஃப்ரீ ஃபிளாப் சர்ஜேரி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் சுஜாய்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM