விதையே இல்லாத மஹாசனோக் மாம்பழம்

02 Apr, 2025 | 02:26 PM
image

முக்கனிகளுள் முதன்மையான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் அதன் தனித்துவமான சுவை.  மாம்பழங்களில் பலவிதமானவை உண்டு. ஆனால், விதையே இல்லாத மாம்பழம் குறித்து கேள்விப்பிட்டிருக்கிறீர்களா?

ஆம், தாய்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட மஹாசனோக் மாம்பழங்களில் விதை இருக்காது. 

இந்த வகை மாம்பழங்கள் சில அளவில் சிறியதாகவும் மேலும் சில அளவில் மிகப் பெரியதாகவும் இருக்கும். 

இந்த மாம்பழத்தின் மெல்லிய சதைப் பகுதியான அனைவரது நாவிலும் எச்சில் ஊறச் செய்துவிடும். 

இது கணிசமான அளவு உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றாகும். 

அண்மைக் காலமாக இந்த மாம்பழம் குறித்த வீடியோவொன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பெண் ஒருவர் மாம்பழங்கள் நிறைந்த கூடையுடன் நிற்கிறார். அதிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து வெட்டுகிறார். ஆனால், அதில் விதையில்லை. 

இந்த வீடியோவே தற்போது மஹாசனோக் மாம்பழங்கள் வைரலாகக் காரணம்.   

                                                                     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்