(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறாது என்றால் எப்போது நடைபெறும் என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும். பழைய தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களும், தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை சட்டமுறைமை ஊடாக நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்படவில்லை. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரா. சம்பந்தன் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டிருந்தது. தற்போது மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.அப்படியாயின் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை குறிப்பிட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பழைய தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான மாகாண ஆளுநர் தலைமையில் மாகாணங்கள் நிர்வகிப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஆகவே மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM