அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது

02 Apr, 2025 | 12:27 PM
image

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரொருவர் எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி - மீட்டியாகொடை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொடை, இடம்தொட்ட பிரதேசத்திற்கு கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் 'பொடி சுத்தா' என அழைக்கப்படும் கிருசாந்த மென்டிஸ் என்பவரை சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC...

2026-01-24 05:15:26
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பில் வெளிப்படையான கலந்துரையாடல்...

2026-01-24 05:08:57
news-image

ஜனாதிபதி வாயால் வடை சுடாமல் பாதிக்கப்பட்ட...

2026-01-24 04:55:00
news-image

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள...

2026-01-24 05:02:18
news-image

22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்...

2026-01-24 04:32:31
news-image

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன்...

2026-01-24 04:31:10
news-image

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த...

2026-01-24 04:29:10
news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49