கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர் பகு­தி­களிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்ட   சம்­பவம் தொடர்பில் மற்­றொரு கடற்­படை வீரரை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். 

ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் 5 கடற்­ படை அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே தற்­போது மற்­றொரு கடற்­படை வீரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

 தங்­கா­லையில் உள்ள ருஹுனு கடற்­படை முகாமில் சேவை­யாற்றி வந்த கடற்­படை வீரர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக குற்றப் புல­னா­யவுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு குற்றப் புல­னா­யவுப் பிரிவின் சமூக கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ரான  குறித்த கடற்­படை வீர­ரிடம் இரவு 8 மணிக்கும் மேலாக சுமார்  10 மணி நேரத்­துக்கும் அதிக நேரம்  விசா­ரணை நடத்­தப்­பட்டே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக  அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில்  லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க உள்­ள­துடன் விளக்­க­ம­றி­யலில் ஏனைய சந்­தேக நபர்­க­ளான கடற்­படை சிறப்பு புல­னா­யவுப் பிரிவின் கமான்டர் சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார,  நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ ஆகியோர் இருந்து ுந்து வருகின்றனர். 

இந் நிலையிலேயே புதிதாக மற்றொரு சந்தேக நபராக கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.