லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 8 விக்கெட்களால் இலகுவாக வென்றது பஞ்சாப் கிங்ஸ்

Published By: Vishnu

02 Apr, 2025 | 01:07 AM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ், எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (01) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 13ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் மிச்செல் மார்ஷ் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தது அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

எவ்வாறாயினும் இரண்டு வீரர்கள் 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் மற்றைய இருவர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் பெற்றதால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது ஏய்டன் மார்க்ராம் (28) ஆட்டம் இழந்தார். ரிஷாப் பான்ட் (2) நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினார்.

எனினும் நிக்கலஸ் பூரண் (44) அயூஷ் படோனி (41) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பை ஊட்டினர்.

மத்திய வரிசையில் அப்துல் சமாத் 27 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 19 ஓட்டங்களையும் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரம் ஊட்டினர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ், 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ப்ரியான் ஆரியா 8 ஓட்டங்களுடன்  வெளியேறினார். (26 - 1 விக்)

ப்ரப்சிம்ரன் சிங் 34 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றதுடன் அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயருடன் 2ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயரும் நெஹால் வதேராவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஷ்ரேயஸ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 52 ஓட்டங்களுடனும் நெஹால் வதேரா 25 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் திக்வேஷ் ரதி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: ப்ரப்சிம்ரன் சிங்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26