இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் டீயையே விரும்பி பருகுகிறார்கள். டீ குடிப்பது அனேகமானோரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.
ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு சரியாக 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) கப் டீ குடிப்பது போதுமானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும். எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே அதிகமாக டீ குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். டீயில் காஃபின் மற்றும் டானின் என்ற கலவை உள்ளது, இது செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
டானின் மிகவும் ஆபத்தானது. டானின் உடலில் அதிக அளவில் நுழைந்தால், அது குடலில் புண்களை ஏற்படுத்தும். அதே சமயம் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு டீ அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
டானின் விளைவைக் குறைக்க என்ன தீர்வுகள் மேற்பட்ட வேண்டும் என்பது குறித்து தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கி தனது கருத்துக்களை முன்வைத்தார்.
டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகையில்,
டீ குடிப்பதால் வயிற்றில் ஆசிட் உற்பத்தி அதிகரிக்கும். வயிற்றில் ஏற்கனவே அதிகப்படியான ஆசிட் இருந்தால், டீ இந்த ஆசிட்டை மேலும் அதிகரிக்கலாம்.அதேசமயம் டீயில் pH மதிப்பு 7க்கு கீழே உள்ளது. சாதாரண கருப்பு டீயில் 4.9 முதல் 5.5 வரை இருக்கும். pH மதிப்பு 7க்குக் கீழே இருந்தால், அதில் ஆசிட் அதிகமாக இருக்கும். எனவே இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற சில அபாயகரமான நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். அதனால்தான் டீயை அதிகமாக குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. டீயின் துவர்ப்பு சுவையானது டானிலிருந்து வருகிறது, எனவே இதை குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் இது பல வகையான தீங்குகளையும் ஏற்படுத்துகிறது என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் வளர்சிதை மாற்றம் குறைகிறது, செரிமானம் பாதிக்கப்படுகிறது மற்றும் புற்றுநோயையும் உண்டாக்குகிறது என்று கண்டறிந்துள்ளது.
இது தொடர்பில், டாக்டர் பிரியங்கா கூறுகையில், டானின் அதிகமாக இருப்பதால், வயிற்றுவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்படுவதில்லை, ஆனால் டீ குறைவாக எடுத்துக்கொள்வது உடல் நல பாதிப்பில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. இந்த காரணங்களுக்காக டீ குடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறோம் என்கிறார் டாக்டர் பிரியங்கா ரோஹத்கி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM