ஜப்பானில் பெரும்பாலான மக்கள் பூனைகளை அதிகம் வளர்க்கின்றனர். ஜப்பானில் உள்ள பல தீவுகளில் பூனைகள் அதிகளவில் வாழுகின்றன.
அத்துடன், ஜப்பானின் தஷிரோஜிமா (Tashirojima) மற்றும் ஒஷிமா (oshima) ஆகிய இரு தீவுகளும் பூனைகளின் தீவுகள் (cats islands) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த இரு தீவுகளும் பூனைகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த இரு தீவுகளிலும் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகமாக வாழுகின்றன.
பூனைகளை வளர்த்து உணவு கொடுத்தால் தீவின் செழிப்பு அதிகரிக்கும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும்.
தஷிரோஜிமா தீவு,
இந்த தீவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அங்கு உள்ள எலிகள் பட்டு நூல்களை அழிப்பதால் அவற்றை பாதுகாப்பதற்காக அதிளவில் பூனைகள் வளர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், நாளடைவில் தஷிரோஜிமா தீவில் பட்டு நூல் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்கு மீனவர்கள் மாத்திரமே உள்ளதாகவும் பூனைகளின் எண்ணிக்கை பெருகி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஒஷிமா தீவு,
இந்த தீவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடி தொழில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது.
அங்கு உள்ள எலிகள் மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதால் பெரும்பாலான மீனவர்கள் பூனைகளை வளர்த்துள்ளனர்.
ஆனால், நாளடைவில் மீன்பிடி தொழிலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதால் அங்கு வாழ்ந்த மக்கள் வெறு பிரதேசங்களுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
ஒஷிமா தீவில் பூனைகளுக்கு கோயில், சிலைகள் என்பன கட்டப்பட்டுள்ளன. இங்கு பூனைகள் வடிவில் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
தஷிரோஜிமா மற்றும் ஒஷிமா ஆகிய இரு தீவுகளிலும் வாழும் மக்கள் பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டம் என நம்புகின்றனர்.
பூனைகளால் இந்த தீவுகள் இரண்டும் மிகவும் பிரபலமாகி உள்ளன. அங்கு உள்ள பூனைகளை காண்பதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் தீவுகளாகவும் இவை காணப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM