(எம்.சி.நஜிமுதீன்)

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய வகை பக்டீரியா ஒன்றை இலங்கையில் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பக்டீரியா இனம் தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் பயன்பாட்டில் உள்ளது. எனவே அதனை இலங்கைக்கு கொண்டுவந்து பயன்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போதைக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வருகிறது.

 

குறித்த பக்டீரிய தாக்கத்தினால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் கட்டுபடுத்தப்படுவதுடன் காலப்போக்கில் அது முற்றாக அழிவடைவந்து போவதற்கு வழிசெய்யக்கூடியது.

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அவுஸ்திரேலியாவில் அதிகளவில் காணப்பட்ட போது குறித்த பக்டீரியா பயன்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது