சருமத்தை பொலிவாக்கும் லோஷன் வகைகள்

01 Apr, 2025 | 02:24 PM
image

நம் இளமையையும், அழகையும் மெருகேற்றிக் காட்டுவதில் லோஷன்களுக்கு முக்கிய இடமுண்டு. இது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்தோடும் வைத்திருக்க உதவும் தோல் பராமரிப்புப் பொருளாகும். இது அனைத்து தோல் வகைகளையும் சரிசெய்து, சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது.

நமது, சருமத்தின் வகைக்கு ஏற்ப, சரியான லோஷனைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். ஆகவே, இவற்றை வாங்கும் போது, அவை எதற்கான பயன்பாட்டுக்குறியது என்பதை கேட்டு வாங்க மறக்காதீர்கள்.

சரும பராமரிப்புக்கானது

இந்த லோஷன்களின் நோக்கம் சருமத்தை மென்மையாக, ஆரோக்கியமாக, பொலிவாக வைத்துக் கொள்வது தான். இவற்றை வறண்ட, இயல்பான, எண்ணெய் தன்மை கொண்ட சருமத்துக்கானவை என்று வகைப்படுத்தலாம்.

சேதத்தை சரிசெய்தல்

சேதத்தை சரிசெய்யக்கூடிய வகையிலான லோஷன்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. இவை, மிகவும் வறண்ட, உலர்ந்த அல்லது சிக்கலான சரும வகைகளுக்கு ஏற்றவை.

செல்லுலைட் குறைப்பு

செல்லுலைட் என்பது நம்முடைய தோலை ஒட்டிய தோலின் உட்புறத்தில் உள்ள மேலடுக்கில் இருக்கும் இணைப்பு, திசு வழியாக கொழுப்பைத் தள்ளுவது ஆகும்.

செல்லுலைட் செம்மஞ்சள் நிற தோல் அல்லது பாலாடைக்கட்டி போன்ற தோற்றமும் தன்மையும் கொண்டிருக்கும். 80 - 90 சதவீதம் பெண்களுக்கு தொடை மற்றும் பிட்டப்பகுதிகளில் தான் இந்த செல்லுலைட் அதிகமாகத் தோன்றும். இதனால் மருத்துவ ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றாலும் அழகை கெடுத்து விடும்.

ஆகவே, இந்த வகையான லோஷன்கள், செல்லுலைட்டை பாதிப்பைக் குறைத்து மிருதுவான சருமத்தைப் பெறவும், தோல் உரிவதை எளிதாக்கவும் உதவும்.

சுருக்கம் அல்லது முதுமையை எதிர்ப்பவை

இது குறிப்பாக முதிர்ந்த சருமத்துக்கான லோஷனாகும். முதுமையை போக்கி, இளமையாகக் காட்சியளிக்க இந்த வகை லோஷன்களை பாவிப்பது சிறந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right