bestweb

பித்தப்பை கட்டிகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

01 Apr, 2025 | 01:19 PM
image

கல்லீரலுக்கு கீழே பித்த நீரை சேமிப்பதே பித்தப்பை. பித்த நீரில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும்போது பித்தப்பையில் கட்டிகள் உருவாகும். 

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை நாம் உண்ணும்போது பித்த நீர், பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று சமிபாட்டுக்கு உதவுகிறது. 

அந்த வகையில் பித்தப்பையில் உருவாகும் கட்டிகளில் 80 சதவீதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பித்தப்பபை கட்டிகள் உருவாக பல காரணங்கள் உள்ளன.

கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையின் அளவு, அதிக உடல் எடை,குடல் மற்றும் கல்லீரல் நோய், நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்களினால் பித்தப்பை கற்கள் உருவாகின்றன.

இந்த பித்தப்பை கற்கள் வலியை ஏற்படுத்தாது. அதனால் கற்களை கரைப்பதற்கு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

மாத்திரைகளை உட்கொண்டும் பலன் கடைக்கவில்லையெனில் பித்தப்பையை அகற்றுவதறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

பித்தப்பை கற்களை தடுப்பதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவற்றுள், நாளாந்த உடற்பயிற்சி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் உட்கொள்ளுதல் போன்றவற்ற கடைபிடிக்கலாம்.

கொழுப்பு அதிகமுள்ள மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும். 

அடிக்கடி விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56