(செ.திவாகரன்)
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (01) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது மேலதிக விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) முதல் காணாமல்போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் டயகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த யுவதி உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டாரா என்பது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM