1.8 டிரில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டு 3 இலட்சம் பேர் வரை உயிரிழப்பர் - ஜப்பானில் பூகம்பத்தால் ஏற்படக்கூடிய சேதம் குறித்து மதிப்பீடு

Published By: Digital Desk 3

01 Apr, 2025 | 12:52 PM
image

பசிபிக் பெருங்கடலின் கரையோரப் பகுதிகளில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு பாரிய பூகம்பம் ஏற்பட்டால் ஜப்பானில் 1.81 டிரில்லியன் டொலர்கள் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என திங்களன்று அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்த இயற்கை அனர்த்தினால் சுனாமி ஏற்படும். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு, சுமார் 300,000 பேர் உயிரிழக்க நேரிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 270.3 டிரில்லியன் யென் (1.8 டிரில்லியன் டொலர்கள்) பொருளாதார சேதம் ஏற்படும். அதாவது, முந்தைய மதிப்பீடு 214.2 டிரில்லியன் யென்களை விட அதிகரித்துள்ளது. 

புதிய மதிப்பீட்டில் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் தரை தரவுகள் வெள்ளப்பெருக்கு பகுதிகள் விரிவடைந்துள்ளது என்பதைக் குறிக்கின்றன.

உலகில் அதிகமாக  பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். நான்காய் பள்ளத்தாக்கு பகுதியில் 8 முதல் 9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்படுவதற்கான 80 சதவீதமான வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசாங்கம்  கணித்துள்ளது.

இதேவேளை, மிக மோசமான சூழ்நிலையில், இந்தப் பகுதியில் 9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், ஜப்பானில் 1.23 மில்லியன் மொத்த சனத் தொகையில் ஒரு வீதம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. 

கோடை காலத்தில் தாமதமாக பூகம்பம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 298,000 பேர் வரை உயிரிழக்க நேரிடும்.

ஜப்பானின் தென்மேற்கு பசிபிக் கரையோரத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு  சுமார் 900 கிலோ மீற்றர் (600 மைல்) வரை செல்கிறது, அங்கு பிலிப்பைன்ஸ் கடல்  பகுதி யூரேசிய தகட்டுக்கு அடியில் செல்கிறது. பூமிக்கடியில் குவிந்து வரும் டெக்டோனிக் தட்டு விகாரங்கள் சுமார் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரிய பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த ஆண்டு ஜப்பான் முதல் பாரிய பூகம்ப எச்சரிக்கையை வெளியிட்டது, ஏனெனில் பள்ளத்தாக்கின் விளிம்பில் 7.1 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்ட பின்னர் பள்ளத்தாக்கில் 9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்படுவதற்கான "ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்பு" உள்ளது.

2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 9 ரிச்டர் அளவிலான பூகம்பம் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியையும் வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஒரு அணு மின் நிலையத்தில் மூன்று உலைகளை சேதப்படுத்தியதுடன் 15,000 க்கும் மேற்பட்டோரை பலியெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46
news-image

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி...

2026-03-14 11:09:21
news-image

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல்...

2026-03-14 11:51:12
news-image

“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி...

2026-03-14 10:45:41
news-image

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு...

2026-03-14 10:34:36
news-image

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு...

2026-03-14 10:10:12
news-image

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி...

2026-03-14 10:13:21