பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். இப்போதும் அதையே மேற்கொண்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும்.
பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். இரு கள்ளர் கூட்டணியும் இணைந்தே நாட்டை கொள்ளியாடித்து வருகின்றனர்.
நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. நாம் இனவாதத்தில் இழந்தவை அதிகமாகும். இந்த அனுபவங்கள் எமக்கு நன்றாகவே உள்ளது. இப்போது மீண்டும் அதே பாதையில் செயற்பட்டு வருகின்றது. முன்னைய அரசாங்கம் இனவாதிகளின் பின்னணியில் இருந்தனர். சில சேனாக்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கம் இனவாதிகளை தண்டிக்காது அமைதி காக்கின்றது.
அரசாங்கம் சூழலை பாதுகாப்பதை விடுத்து சூழலை மேலும் மாசுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல் சர்வதேச நாடுகளுக்கு நிலங்களை விற்று பிரச்சினைகளை மேலும் மோசமாக்கி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM