முதல் நாள் எஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை மறுநாள் காலையில் சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். இந்த பழைய சாதம் எத்தகைய ஊட்டச் சத்து நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், பெரியவர்களுக்கு உகந்ததான இந்த பழைய சாதத்தை, சிறுவர்களும் சாப்பிடலாமா என்றால், உடனே நாம் தரும் பதில், இல்லை… இல்லை.. அதனால் சளி பிடிக்கும் என்பதுதான். ஆனால், இது ஒரு மூட நம்பிக்கை என்கின்றார்கள் மருத்துவ வட்டாரத்தில்.
பொதுவாக, பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அதிலும், வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை பழைய சாதம் பாதுகாக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
அதாவது, பழைய சாதத்தில் லெக்டிக் எசிட் பக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளனவாம். இவை, பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கக் கூடியவை. குடலில் உள்ள நல்ல பக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் இவை, செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றனவாம். அதன் விளைவாக மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் போன்றவை உடலில் அதிகரித்து, நமது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கின்றனவாம்.
மேலும், சிறுவர்களுக்குப் பழைய சாதம் கொடுக்கும்போது, அத்துடன், தயிர் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. அதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயோடிக் எனப்படும் நல்ல பக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாம்.
அதேசமயம், குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் பழைய சாதம் திகழ்கின்றது. அதனால், காலை உணவை சாப்பிட மறுக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு தயிர் சேர்த்த பழைய சாதம் கொடுப்பது மிகவும் சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
இருப்பினும், இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்திற் கொள்வது நல்லது. அதாவது, எப்போது, எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதன் அளவை சரியானளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். ஆகையால், பழைய சாதத்துடன் தயிர் மட்டுமன்றி, காய்கறிகளையும் சேர்த்துக் கொடுத்தால் அது முழுமையான உணவாக இருக்கும். மற்றபடி பழைய சாதம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பில்லை என்கின்றது மருத்துவ வட்டாரம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM