அரணை என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இனங்களாகும். வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய இந்த உயிரினமாது, வெப்பமான வேளைகளில் மட்டுமே வெளியில் வரக்கூடியவை.
இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும் இவை, நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கிவிடும். எதை பற்றியும் கவலையில்லாது உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அடுத்து பூமியில் வெப்பம் பட்டு, நிலம் சூடாகி, அந்த புழுக்கம் உள்ளே தாக்கும் வரை தூக்கம் மட்டும்தான்.
அரணையின் தோல் உலர்ந்தது. கொம்புச் செதில்கள் எனும் படிவைக் கொண்டு மூடிக் கொண்டிருக்கும். இத்தோல் அதன் உடலை வறண்ட காற்றில் நீர் ஆவி ஆகாதபடி காக்கிறது. இவை தோலினால் மூச்சு விடுவதில்லை. கோடை காலத்தில் அரணை அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும். உள்ளிருந்து வளரும் புதிய படிவு பழைய தோலுக்கு அடியில் உருவானதும் தோலின் கொம்புப் பொருளிலான படிவு சீரற்ற துண்டுகளாகப் பிரிந்து விழுந்து விடுகின்றன.
இவ்வாறான அரணை மிகவும் சாதுவான ஒரு பிராணியாகும். அது மனிதர்களைக் கண்டால் ஓடி மறைந்துவிடும். அரணைக்கு மறதிக் குணம் அதிகமாம். அதாவது தான் கடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்த ஒன்றை நோக்கி மெதுவாக வருமாம். ஆனால் கிட்ட வந்ததும் தான் நினைத்துவந்த காரியத்தை மறந்துவிட்டு வந்த வழியே திரும்பிவிடுமாம்.
அரணை தன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தனது வாலினை ஒடித்துவிட்டு தப்பிடிடுமாம். இத்தகைய அரணை சாதாரணகாக பல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓந்தி இனமாதலால் அது கடிக்கவும் மாட்டாது, கடித்தாலும் விஷமும் ஏற்படாது.
எதிரிகள் தாக்க வந்தால் அரணை வேகமாக நகர்ந்து பொந்து, கல்லிடுக்குகளில் புகுந்துக் கொள்ளும். அப்போது வாலை உள்ளே இழுப்பதற்குள் எதிரி, வாலை பிடித்துவிட்டாலும் கவலையே படாது.
வாலை முறித்துக்கொண்டு, உள்ளே சுருங்கிவிடும். எதிரி வாலோடு வந்த வழியே திரும்பி போவதை தவிர வேறு வழியில்லை. முறிந்துபோன வால் சில நாட்களில் வளர்ந்துவிடும். நமக்கு நகம் போல, அரணைக்கு வால் வெட்ட வெட்ட வளர்ந்துவிடும்.
மேலும், அரணை ஒரு விஷ ஜந்து என்று சிலர் கருதியபோதும், அரணைகளை பற்றிய போதிய புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் என்கின்றார்கள் விலங்கிய நிபுணர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM