எம்முடைய கலாச்சாரத்தில் பெண் பிள்ளைகளும், வளரிளம் பெண்களும், பதின்ம வயதுள்ள பெண்களும், பெண்மணிகளும், சில நவ நாகரீக இளைஞர்களும் காது மடலில் ஆபரணங்களை அணிகிறார்கள். இதற்காக காது மடல் பகுதியில் துளையிடப்பட்டு தங்கம், வெள்ளி, மற்றும் வைர ஆபரணங்களை அணிந்து கொள்கிறார்கள்.
முக தோற்ற பொலிவிற்கு சிறப்பு சேர்க்கும் இத்தகைய காது மடல் அணிகலன்கள் சில பெண்மணிகளுக்கு நாளடைவில் காது மடல் பகுதியில் பாரிய பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதனை மருத்துவ மொழியில் இயர் லோப் ரிப்பேர் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பை சீராக்க தற்போது நவீன சிகிச்சைகளும், சத்திர சிகிச்சையும் அறிமுகப்படுத்தப்பட்டு, பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
காது மடல் பகுதியில் தோல் மற்றும் கொழுப்பு சத்து உள்ளது. காது மடல் பகுதியில் காதில் ஏனைய பகுதிகளை போல் அல்லாமல் குருத்தெலும்பு இங்கு இல்லை. மேலும் பொதுவாக காது மடல் பகுதியில் முதுமை காரணமாக அங்குள்ள தோலின் நீட்சி தன்மையில் பாரிய பின்னடைவு ஏற்படுகிறது.
சில பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் காது மடல் பகுதியில் ஆபரணங்களை அணிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட துளை பெரிதாகி அவலட்சணத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் அப்பகுதியில் துளை பெரிதாகி ஆபரணங்கள் அணிய இயலாத நிலையும் ஏற்படக்கூடும் சில பெண்மணிகளுக்கு இப்பகுதியில் உள்ள தோலில் பிளவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
இத்தகைய பாதிப்புள்ள பெண்மணிகளுக்கு வைத்தியம் நிபுணர்கள் டெர்மல் ஃபில்லர்ஸ் எனப்படும் சிகிச்சையின் மூலம் நிவாரணத்தை வழங்குகிறார்கள். இந்த நிவாரணம் தற்காலிகமானது என்பதையும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வேறு சில பெண்மணிகளுக்கு காது மடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் துளை பாதிப்பை சீராக்க டிஸ்யூ அட்சேவ்ஸ் எனும் ( Tissue Adhesives) எனும் சிகிச்சை மூலம் பிரத்யேக பசை போன்ற ஒரு பொருளை செலுத்தி நிவாரணம் வழங்குகிறார்கள். இது செயற்கையான முறையில் மேற்கொள்ளப்படுவதால் இதன் ஆயுள் குறித்த உறுதியை தர இயலாது. சிலருக்கு இந்த சிகிச்சை ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
சிலருக்கு காது மடல் பகுதியில் அணிகலன்களை அணிய முடியாத நிலை ஏற்பட்டு, பிளவுபட்டிருந்தால் அதனை லோபுலோபிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை அளிப்பர். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை வைத்தியரின் அவதானிப்பில் இருக்க வேண்டும்.
வைத்தியர் கோகுல்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM