(இராஜதுரை ஹஷான்)
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை (5) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படும் என அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஒவ்வொரு மாவட்ட செயலகங்களுக்கும் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறும் அரச உத்தியோகஸ்த்தர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களில் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொது வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரச அச்சகத் திணைக்களம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தபால் சேவை ஊடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM