மியன்மார் பூகம்பம் - திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு - கர்ப்பிணியை காப்பாற்றும் முயற்சி தோல்வி

Published By: Rajeeban

31 Mar, 2025 | 04:20 PM
image

மியன்மாரை பூகம்பம் உலுக்கிய 60 மணித்தியாலங்களிற்கு பின்னர் திங்கட்கிழi இடிபாடுகளிற்குள் இருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்பிழைத்திருக்ககூடியவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களிற்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

இயந்திரங்கள் அற்ற தன்னார்வ தொண்டர்களான மீட்பு பணியாளர்கள் பூகம்பம் தாக்கிய பின்னர் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இந்த பூகம்பத்தினால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 2000 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

உயிரிழப்புகளின் உண்மையான அளவு இதுவரை தெரியவரவில்லை என்ற அச்சமும் நிலவுகின்றது.

திங்கட்கிழமை காலையில்  ஐந்து மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்டலாயின்  கிரேட்வோல் ஹோட்டலின் இடிபாடுகளி;ற்குள் இருந்து பெண் ஒருவரை மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டுவந்தவேளை மகிழ்ச்சியான நிலை காணப்பட்டது என மியன்மாருக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணியாளர்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்க்கது.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டவேளை அங்கு காணப்பட்டவர்கள் கரகோசங்களை எழுப்பியதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மியன்மாரில் பூகம்பம்காரணமாக தரைமட்டமாகியுள்ள அலுவலகங்கள் பாடசாலைகள் ஹோட்டல்கள் மதவழிபாட்டுதலங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றின்  இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மண்டலாயின் தொடர்மாடியொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர், அவரை மீட்பதற்காக அவரது காலை துண்டித்தனர் ஆனால் பின்னர் அவர் உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு

2026-03-10 17:10:40
news-image

வியட்நாமிலும் எரிபொருள் நெருக்கடி: ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே...

2026-03-10 16:04:55
news-image

ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் 

2026-03-10 14:26:09
news-image

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு ;...

2026-03-10 14:11:09
news-image

லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த...

2026-03-10 13:43:27
news-image

ஈரான் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தைத்...

2026-03-10 12:39:25
news-image

லெபனானில் உக்கிரமடையும் போர்: 7 இலட்சம்...

2026-03-10 10:27:24
news-image

போர் எப்போது முடியும் என்பதை நாமே...

2026-03-10 09:56:42
news-image

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன...

2026-03-10 06:17:35
news-image

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது லெபனான்

2026-03-10 05:57:01
news-image

துருக்கி மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை...

2026-03-10 05:40:57
news-image

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு புடின்...

2026-03-09 21:46:08