உலகில் இன்று வரை மர்மமான மனிதர்களாக பேசப்படுகின்ற சிலரை பற்றிய தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி கண்டுபிடிப்பு : ஆணா, பெண்?
இன்று உலகில் மிக வேகமாக இயங்கிவரும் ஒரு கரன்சிதான், கிரிப்டோ கரன்சி. கரன்சி என்பது பணத்தாள் (Currencies), சில்லறைகள் (Coins), டொலர்கள் (Dollars), யூரோக்கள் (Euro) என சொல்லலாம். இவை அனைத்துக்கும் வடிவம் உண்டு. இவற்றை கண்களால் பார்க்கவும், கைகளால் கொடுத்து வாங்கவும் முடியும்.
ஆனால், கரன்சிக்கு மாற்றானது “கிரிப்டோகரன்சி” (Crypto currency) ஆகும். இது முற்றிலும் இணையமயமானது. கண்களால் பார்க்கவோ, தொடவோ முடியாது. இவை அனைத்தும் இணையத்தில் எண் வடிவத்தில் இருக்கும். இதனை நாம் நமது, வணிகப் பயன்பாட்டுக்கு பயன்டுத்திக்கொள்ளலாம்.
இணைய ரீதியான வர்த்தகத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கரென்சியை வைத்து, இன்று பெருமளவில் வர்த்தகம் நடந்துவருகிறது. இதைக் கண்டுபிடித்தவர் சாடோஷி நாகமோடோ என்ற தகவல் மட்டும் இருக்கிறது. அவர் யார் என யாருக்கும் தெரியவில்லை. அந்தளவுக்கு அவர் தன்னை கட்டமைத்துள்ளார்.
அவர் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி பிறந்ததாகவும், தற்போது ஜப்பானில் வாழ்வதாகவும் மட்டுமே தகவல் இருக்கிறது. ஆனால், அவர் ஆணா, பெண்ணா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இப்படிப்பட்ட நபர் இறந்துவிட்டதாக சிலரும், சிலர் இப்படி ஒரு நபரே இல்லை எனவும் சொல்கின்றார்கள்.
கட்டடத்திலிருந்து குதித்த மனிதன்
உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத சில சம்பவங்களில் 9/11 எனப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவமும் ஒன்று. அந்த தாக்குதல் நடந்தபோது இந்த கட்டடத்துக்குள் இருந்தவர்கள் என்ன செய்வது, எப்படித் தப்பிப்பது என எதுவும் தெரியாமல் தவித்தனர். இதைக் கட்டடத்தில் இல்லாத பலர் காணொளி எடுத்தனர். அந்த சம்பவத்துக்குப் பின்னர் வெளியான காணொளிகளை வைத்து அதில் உள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்தது.
அந்தக் காணொளிகளில் ஒன்றில், கட்டடம் இடிந்த போது எப்படித் தப்பிப்பது எனத் தெரியாமல் ஒரு மனிதன் கட்டடத்திலிருந்து குதித்துள்ளார். அவர் யார் என யாராலும் இன்று வரை அடையாளம் காண முடியல்லை. இவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த மனிதன் மர்மமான மனிதனாகவே அறியப்படுகிறார்.
யார் அவள்?
கடந்த 18ஆம் நூற்றாண்டின் ஒரு சமயத்தில் பரிஸ் நகரில் மர்மமான முறையில் ஒரு பெண் இறந்து கிடந்தாள். அவளை பிரேதப் பரிசோதனை செய்த போது, அந்த பெண் தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்தது. அந்நாட்டில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியிலிருந்த அதிகாரியொருவர், அந்த பெண்ணை அடையாளம் காணப் பார்த்தபோது அந்த பெண் மிக அழகாக இருப்பதாக உணர்ந்தார். அவள் தான் உலகிலேயே பேரழகி என்று உணர்ந்த அவர், இறந்துபோன அந்த பெண்ணின் முகத்தை அச்சு எடுத்தார். அந்த முகம்தான் பலரால் இரசிக்கப்பட்டுப் பிரபலமானது. ஆனால் இன்று வரை அந்த பெண் யார், எதற்காகத் தற்கொலை செய்தார் என்ற எந்த தகவலும் இல்லை.
விமானத்தையே கடத்தியவர்!
உலகில் எந்த குற்றம் செய்தாலும் தப்பிவிட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் விமானத்தைக் கடத்தும்போது அந்த குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. விமான நிலைய கட்டுப்பாடு, பாதுகாப்பு தரப்பு உள்ளிட்டவற்றை மீறி ஒருவர் விமானத்தைக் கடத்தி ஆதாயம் பெற்று யாரிடமும் சிக்காமல் தப்பியுள்ளார் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?
1971ஆம் ஆண்டு இவர் வொஷிங்டனில் இருந்து ஓரேகான் செல்லும் போயீங் 727 ரக விமானத்தைக் கடத்தினார்.
இந்த விமானத்தைக் கடத்திய அவர் அமெரிக்க அரசிடம் 2 இலட்சம் டொலர் பணத்தைப் பெற்று விட்டு, அரசு விமானத்திலிருந்து பரசூட் மூலம் தப்பித்தார். ஆனால் இன்று வரை அவர் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
37 பேரை கொன்ற ஒரே மனிதன்!
1960 -1970களுக்கு இடையில் அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வந்தன. கொலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் 16-29 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களை எல்லாம் ஒரே நபர் தான் கொலை செய்கிறார் என்ற தகவலை மட்டும்தான் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் யார் கொலை செய்கிறார் எனக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மாறாக, அவரே தான் இதுவரை 37 பேரை கொலை செய்ததாகப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த வழக்கு இன்றும் விசாரணையிலேயே இருக்கிறது.
மதுபான படையல்
‘எட்கர் எலன் போ’ என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் மிகப் பிரபலமானவை. இவர் கடந்த 1849ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இவரது சமாதி இன்றும் அமெரிக்காவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 1949ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இவரது சமாதியில் ஒவ்வோர் ஆண்டும் இரவு ஒரு குறிப்பிட்ட வகை மதுபானம் படைக்கப்பட்டு வந்தது. இதை யார் படைத்தார் என்பது இன்று வரை மர்மம்தான். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இது ஏன் நிறுத்தப்பட்டது என்பதும் மர்மமான விடயம் தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM