பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன.

மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே இவ்வாறு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுடன் இலங்கை கடற்படையினர், பிரான்ஸ் கடற்படையினருடன் இணைந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.