அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்

31 Mar, 2025 | 03:52 PM
image

(செ.சுபதர்ஷனி)

அம்பலாந்தோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல பகுதியில் இன்றைய தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த சந்தேகநபர்கள் இருவர் அங்கிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 வயதுடைய அம்பாந்தோட்டை கொக்கல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை காயமடைந்த நபர் மற்றும் பிறிதொரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலம் நிலவிவந்த முன்விரோதம் காரணமாக மேற்படி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவத்துடன்,  தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49
news-image

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் -...

2025-11-11 14:46:20
news-image

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை...

2025-11-11 17:35:23